Putham Pudhu Kaalai Song Lyrics, Megha - Anitha Lyrics

Putham Pudhu Kaalai Song Lyrics, Megha - Anitha Lyrics


Singer Anitha
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அது தான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
ஹ அ அ ஆ...
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது
இசை பாடுது
வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
லல்லலல்ல லாலா
லாலல்லலல்ல லாலா


Post a Comment

0 Comments